ETV Bharat / state

‘வாக்கி டாக்கி ஊழலில் அமைச்சர்களுக்கு தொடர்பு’ - முத்தரசன் குற்றச்சாட்டு

author img

By

Published : Feb 10, 2020, 8:18 PM IST

கோவை: காவல்துறையில் நடைபெற்ற வாக்கி டாக்கி ஊழலில் அமைச்சர்களுக்கும் காவல்துறையில் உயர் பதவிகளிலில் இருப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை வாக்கி டாக்கி ஊழல்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன்  cpi mutharasan  cpi mutharasan news  tnpsc fraud  டிஎன்பிஎஸ்சி முறைகேடு
வாக்கி டாக்கி ஊழலில் அமைச்சர்களுக்கு தொடர்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கோவையிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது. அதேசமயம் போராட்டம் நடத்துவதற்கு வாய்மொழியாக அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் வழக்கு தொடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் விளக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

முத்தரசன்

மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத இடங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தேர்தலை நடத்துவதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்திய அவர், டிஎன்பிஎஸ்சி முறைகேடு மற்றும் வாக்கி டாக்கி ஊழல் உள்ளிட்டவற்றில் அமைச்சர்களுக்கும், உயர் பதவிகளிலில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று குற்றஞ்சாட்டினர்.

வாக்கி டாக்கி ஊழலில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது - முத்தரசன்

எஸ்சி மற்றும் எஸ்டி பதவி உயர்வு இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து பேசுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த கவலையளிக்கிறது என்றும், இது சமூகநீதிக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம்- முத்தரசன்

Intro:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பு

Body:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் சி.ஏ.ஏப்போன்ற போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகிறது அதேசமயம் போராட்டம் நடத்துவதற்கு வாய்மொழியாக அனுமதி கொடுத்து விட்டு பின்னர் வழக்கு போடுகிறது என்றும் குற்றம் சாட்டினார். டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக முதல்வர் அறிவித்திருப்பதை தாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். அதேசமயம் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்றும் அதை ரத்து செய்யப்படுமா என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது இடங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் தேர்தலை நடத்த அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் உயர் அதிகா ரத்தில் இருப்பவர்களுக்கும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தொடர்பு உண்டு என்றும் குற்றம் சாட்டினார். காவல் துறையில் நடைபெற்ற ஊழலில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார். எஸ்சி மற்றும் எஸ்டி பதவி உயர்வு இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது கவலையை அளிக்கிறது என்றும் இது சமூக நீதிக்கு எதிரானது என்றும் கூறினார் மேலும் வருமான வரித்துறை ஆனது பாஜக அரசு சொல்வது செய்வதாக தெரிகிறது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் படப்பிடிப்பிலேயே நடிகர் விஜயை காவல்துறையினர் கைது செய்து சென்றதும் அதை எதிர்த்து குரல் கொடுத்த அவரின் ரசிகர்களை காவல்துறை அடக்கியதும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். மேலும் அன்புசெழியன் இடம் இருக்கும் பணம் "ப" என்பவரின் பணம் மற்றும் "உ" என்பவரின் பணம் என்று நாளிதழ் கூறுகிறது அதை ஏன் வருமான வரித்துறை விசாரிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.