பொள்ளாச்சி : பரம்பிக்குளம் அணை பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்டது, அணையின் பாரமரிப்பு தமிழக பொதுபணித்துறையினர் கண்காணிப்பில் உள்ளது. அணையின் முழு கொள்ளவு 72 கனஅடி.
கடந்த 21.9.2022 நடு இரவு அணையின் மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஷட்டர் சங்கலி அறுத்து அடித்து செல்லப்பட்டது. இதனால் 6 டி.எம்.சி தண்ணீர் பாரத புழாவில் கலந்து வீண்னாது. தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு, மின்சார துரை அமைச்சர் செந்தில்பாலாஜி அணையில் ஆய்வு மேற்கொண்டனர்,
இந்நிலையில் தமிழக அரசு அணையின் ஷட்டரை சீர் அமைக்க ரூ 7 கோடியோ 20 லட்சம் ஓதுக்கப்பட்டு போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. 90 சதவீதம் பணி நிறைவுபெற்று வரும் 20.11.2022 முழுமையாக பணிகள் நிறைவடையும் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் பெருவாரிப் பள்ளம், தூணக்கடவு, சர்க்கார் பகுதியில் உள்ள தடுப்பு அணைகளை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பார்வையிட்டார், ஆய்வின்போது நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயக்குமார், தியாகராஜன் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : தொடர் மழை: கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை