ETV Bharat / state

கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா கோழிகளை வழங்கிய அமைச்சர் - கோழி அபிவிருத்தி திட்டம்

கோயம்புத்தூர்: கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Oct 29, 2020, 7:41 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலை சட்டப்பேரவை தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதிகளில் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மொத்தம் 1, 400 கிராமப்புற பெண்களுக்கு தலா 25 நாட்டுக்கோழி வீதம் கால்நடை பராமரிப்பு அமைச்சர், அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நேரடியாக வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன், கால்நடைத்துறை இணை இயக்குநர் பெருமாள் சாமி, துணை இயக்குநர் முருகன், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இளஞ்செழியன், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய குழு தலைவர் லட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர் காந்திமதி முத்துமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயக்குமார், ஆறுச்சாமி, ஆனந்தகுமார், பாலச்சந்தர், கிரிராஜ் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரங்கராஜ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள், கால்நடை மருத்துவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.