ETV Bharat / state

'அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, பக்குவமும் கிடையாது' - செந்தில் பாலாஜி விமர்சனம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது; புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது; பொய் சொல்வதற்காகவே செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

hஅண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி
அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி
author img

By

Published : Jun 1, 2022, 3:59 PM IST

கோயம்புத்தூர் பீளமேடு சாலை 'நவ இந்தியா' பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தொழிலில் தமிழ்நாட்டின் தலைநகராக கோயம்புத்தூர் விளங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

விமான நிலைய விரிவாக்கத்திற்கு 3 மாதங்களில் நிலம் எடுக்கும் பணி நிறைவடையும். நாடாளுமன்றத் தேர்தலைக் கவனத்தில் வைத்து கொண்டு தொண்டர்கள் செயல்படவேண்டும். உள்ளாட்சியில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும். கலைஞரின் பிறந்தநாளை மாவட்டம் முழுவதும் திருவிழா கோலமாக நடத்த வேண்டும். அது மக்களுக்குப் பயனுள்ள நிகழ்வாக நடைபெற வேண்டும்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 400 இடங்களில் சாதனை விளக்கி தெருமுனைக்கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று ஓராண்டு சாதனையை துண்டு பிரசுரமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பாலங்கள் விரைவில் திறக்கப்படும்.

மருதமலையில் சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை: குடிநீர் தேவைகளைப் பொறுத்தவரை, இரண்டு நாள்களுக்கு ஒரு முறை நீர் கிடைக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி சரி செய்யப்படும். தனியார் பேருந்துகளில் அதிவேகத்தை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து பிடிக்க பணிகள் விரைவுபடுத்தபட்டுள்ளது. அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரைக்குறைவாகப் பேசினார்.

அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார். அண்ணாமலைக்கு எந்த புரிதலும் கிடையாது. புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. பத்திரிகையாளர்கள் பக்கத்தையும் தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். முதலமைச்சர், மின்சார உற்பத்தி குறித்தும் ஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ளார். தமிழ்நாடு வரிகள் வேறு மாநிலங்களுக்குச் செல்கிறது. எங்கள் மீது தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டினால் சரி செய்யத் தயாராக உள்ளோம்” என்றார்.

அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல - பொன்னையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.