கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது எனவும், தொலைநோக்கு சிந்தனையுடன் அரசு திட்டங்களை செயல்படுத்திவருகிறது எனவும் கூறினார்.
அதேபோல், மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு அரசு நீட் தேர்வு பயிற்சி அளித்துவருகிறது என்று கூறிய அவர், நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக் கல்வித் துறையின் பணி எனவும் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த விளக்கமே போதுமானது எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்தாண்டு இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்று கூறிய அவர், அடுத்தாண்டு 500 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்ட விவகாரம்; தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு