ETV Bharat / state

தேவர் ஜெயந்தி விழா: நலத்திட்ட உதவிகளை வழங்கினார் எஸ் பி வேலுமணி - S P Velumani in Thevar Jayanthi

கோவை: தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ் பி வேலுமணி முத்துராமலிங்க தேவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

Thevar Jayanthi function in Coimbatore
Thevar Jayanthi function in Coimbatore
author img

By

Published : Oct 30, 2020, 4:41 PM IST

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113ஆவது பிறந்தநாள் தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் அமைப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியிலுள்ள முத்துராமலிங்க தேவரின் புகைப்படத்திற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகுந்த இடைவெளியின்றி நடத்தப்பட்ட கூட்டம்

இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டதால், சமூக இடைவெளியின்றி பெரும் கூட்டம் காணப்பட்டது. அதுமட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது மக்களிடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதையும் படிங்க: தூய்மையை மீட்டெடுக்க தேவர்ஜெயந்தியில் உறுதியேற்போம் -முக ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.