கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டி கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு சிஞ்சுவாடி, கூளநாயக்கன்பட்டி, கஞ்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் தேசிய பாதுகாப்பு இயக்கம், ஊட்டச்சத்துமிக்க தானியங்கள் குறித்து பிரசார வாகனத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து, தானிய விதைகளை வழங்கினார்.
இதையடுத்து பனை, ராகி, குதிரை வாலி, சோளம், கம்பு உள்ளிட்ட ஊட்டச்சத்து தானியங்களின் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் நான்கு கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இது குறித்து வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
'பாரத பிரதமரின் நுண்ணுயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நான்கு கிராமங்களில் 6 லட்சம் ரூபாய் மானியமும், 56.20 ஹெக்டர் விவசாயிகளுக்கு 22 லட்சம் ரூபாய் மானியமும் கடந்த கால ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் விவசாயிக்கு மத்திய, மாநில அரசு நுண்ணுயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டு, 80 லட்சம் ரூபாய் வரை 100 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு பயன்பெற்று உள்ளனர்' என அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: