ETV Bharat / state

காலையில் குடிப்பவர்களை 'குடிகாரர்கள்' என்றால் பொறுத்துக்கொள்ள முடியாது - அமைச்சர் முத்துசாமி

author img

By

Published : Jul 18, 2023, 9:02 AM IST

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், காலையில் குடிப்பவர்களை 'குடிகாரர்கள்' என்றால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கோவை மாவட்ட திமுக பொறுப்பு அமைச்சருமான முத்துசாமி நேற்று (ஜூலை 17) கோவையில் பல்வேறு இடங்களில் ரூ.17.45 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோவை மாநகரில் 260 கோடி ரூபாய் மதிப்பில் 567 கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்படுவதாக கூறினார். மாவட்டத்தில் 7 ஆயிரம் சைக்கிள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும், மற்றவர்களுக்கும் மிக விரைவில் சைக்கிள் வழங்கப்படும் என்றார். மாணவர்கள் சைக்கிளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்றும், பள்ளிக்கு வரும்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை என்றும், இந்த சோதனை திட்டமிட்டு செய்யப்படுவதாகவும், இதனால் யாரும் தொய்வடைந்து விடப் போவதில்லை என்றும் கூறினார். அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும், இதிலிருந்து அவர் மிக விரைவில் மீண்டு வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அமலாக்கத்துறை சோதனைகளால் பயத்தை ஏற்படுத்தி விட முடியாது என்றும், எங்களது கவனத்தை திருப்ப முடியாது என்றும் கூறிய அமைச்சர் முத்துசாமி, பெங்களூருவில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் எதிர்கட்சிகள் கூட்டம் சிறப்பாக நடக்கும் என்றார்.

டாஸ்மாக் கடைகள் 7 மணிக்கு திறப்பதா? கோவை மத்திய சிறைச்சாலை இடம் மாற்றம் செய்யப்பட்டு, அங்கு 'செம்மொழி பூங்கா' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறப்போம் என ஒரு இடத்தில் கூட நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று கூறினார்.

டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்னை தீர்ந்தால்தான் நிம்மதியாக வேலை செய்ய முடியும் என்றும், இதனைத் தீர்க்க 18 தொழிற்சங்கங்களிடம் இருந்து வாங்கிய மனுக்களை ஆய்வு செய்து, உடனடியாக தீர்க்கும் பிரச்னைகள் குறித்து தொழிற்சங்கங்கள் உடன் ஒப்பந்தம் போட தயாராக உள்ளதாகவும் கூறினார். மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக ஏற்கனவே சொல்லியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுபாட்டில்களால் பல்வேறு பிரச்னைகள் வருவதால், டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதாகத் தான் கூறியதாகவும், இதை அன்பாக சொன்னால் ஏன் திட்டுகிறார்கள் என்றும் கேள்வியெழுப்பினார். இதனால் மதுபாட்டில்கள் சேதமடைவது, கலப்படம் செய்வது ஆகியவை தவிர்க்கப்படும் என சொல்லப்படுவதால், இந்த டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து கருத்துகள் கேட்ட பிறகே கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

குடிப்பவர்களை 'குடிகாரர்கள்' என அழைக்கக்கூடாது: டெட்ரா பேக்கில் 90 மி.லி. மது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இவை நடைமுறைக்கு வந்தாலும் வரலாம், இல்லை வரமாலும் போகலாம் என்றார். காலையில் குடிப்பவர்களை 'குடிகாரர்கள்' என்று சொல்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான வேலை செய்பவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். இதனைத் தவிர்க்க மாற்று வழி ஆலோசனைகளை சொல்லுங்கள் என்றும், டாஸ்மாக் மூலம் பெரிய வருமானம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணம் இல்லை. சட்ட விரோதமாக மது வாங்கி தவறு நடக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர் முத்துசாமி, மதுக்கடையில் காத்திருப்பதை தவிர்க்க 90 மில்லி லிட்டர் மது கொண்டு வர ஆய்வு செய்யப்படுவதாகவும், மது குடிப்பவர்களை படிப்படியாக நமது பக்கம் கொண்டு வர வேண்டும் என்றார். சிறிய நூற்பாலைகள் வேலைநிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், அதன் முடிவு விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Senthil balaji: செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்.. மீண்டும் விசாரிக்க தயாராகும் அமலாக்கத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.