ETV Bharat / state

எம்பி தேர்தல் தோல்வி: ‘மேயர்’ஆவதற்கு களமிறங்கும் ஜெயக்குமார் மகன்! - அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் மேயர் பதவிக்கு போட்டி

சென்னை: கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய ஜெயவர்தன், தற்போது சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார்.

minister Jayakumar's son jayavardhan tries to become mayor
author img

By

Published : Nov 15, 2019, 7:43 PM IST

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட அதிமுக அலுவலகங்களில் விருப்ப மனுக்களை இன்றும் நாளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை முதலே தொண்டர்கள் அதிமுக அலுவலகங்களில் குவிந்தனர். அதன் ஒருபகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி தலைமையில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், முன்னாள் அதிமுக மக்களவை உறுப்பினரும், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமாகிய ஜெயவர்தன் சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு பெற்றுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் தென்சென்னை பகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஜெயவர்தன் தற்போது மேயர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க: தேமுதிக நிர்வாகிகளுக்கு விருப்ப மனு விநியோகித்த விஜயகாந்த்!

Intro:Body:முன்னாள் எம் பி ஜெய வர்தன் சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக காலை முதலே தொண்டர்கள் அதிமுக அலுவலகங்களில் குவிந்தனர். இன்றும் நாளையும் விருப்ப மனுக்கள் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் எம் எல் ஏ ரவி தலைமையில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் அதிமுக எம் பி யும், அமைச்சர் ஜெயக்குமார் மகனாகிய டாக்டர் ஜெயவர்ன் சென்னை மானகாட்சி மேயர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு வாங்கி உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை பகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஜெயவர்த்தன் தற்போது மேயர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கியது குறிப்பிட தக்கது Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.