ETV Bharat / state

மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை 1200 பேருக்கு வழங்கிய அமைச்சர்!

கோவை: ஊரடங்கு உத்தரவால் அவதியடைந்து, வரும் விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் வகையில், 1200 பேருக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

author img

By

Published : Apr 26, 2020, 12:15 PM IST

அமைச்சர் எஸ் பி வேலுமணி ஒருவருக்கு அத்தியவாசிய பொருள் வழங்கும் காட்சி

கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புறத்திலுள்ள ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி, வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டிலேயே முடங்கி இருப்பதால் சிரமம் அடைகின்றனர்.

இம்மக்களுக்கு உதவும் வகையில், பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர், குருநல்லிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிப் பொருட்கள் வழங்குகிறார்

அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 144 தடை உத்தரவு காலங்களில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கோயில்களில் அன்னதானம் தொடர அனுமதி கோரும் பாஜக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.