ETV Bharat / state

கோவையில் மிலாடி நபி கொண்டாட்டம் - மதநல்லிணக்கப் பிரியாணி விருந்து - Coimbatore District News

மிலாடி நபி விழாவை முன்னிட்டு கோவையில் அனைத்து மதத்தினருக்கும் குறைந்த விலையில் ஆட்டுக்கறி பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது

இஸ்லாம் ஷாபியா ஜமாத் பள்ளிவாசல்
கோவை கோட்டை ஹிதாயத்துல்லா
author img

By

Published : Oct 19, 2021, 6:03 PM IST

கோவை: இறைதூதரான முகமது நபியின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் " மிலாடி நபி " விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த புனித நாளை இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களும் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்;

அந்தவகையில், இதன் ஒரு பகுதியாக கோவையிலும் மிலாடி நபி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் பள்ளிவாசல்களில் செய்யப்பட்டது.

அனைத்துத் தரப்பினருக்கும் அறுசுவை உணவு

இதில் மிலாடி நபி விழாவன்று, இஸ்லாமியர்களில் அனைத்துத் தரப்பினரும் சுவையான உணவு சாப்பிட்டு, மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவாசல் நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் உக்கடம், கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மிலாடி நபி விழாவிற்காக "அனைத்து மதத்தினருக்கும் குறைந்த விலையில் பிரியாணி விநியோகம் செய்வதற்காக, பிரியாணி தயாரிக்கும் பணிகள் நேற்று இரவு முதலே நடைபெற்றன".

15 ஆயிரம் பேருக்கு பிரியாணி

பள்ளிவாசல் அருகில் உள்ள இடத்தில், 50 பிரமாண்ட பாத்திரங்களில் 2,500 கிலோ அரிசியைக் கொண்டு மட்டன் பிரியாணியானது தயாரிக்கப்பட்டது.

விடிய விடிய பிரியாணி தயாரிக்கப்பட்டு, இன்று காலை முதல் குறைந்த விலையில் பிரியாணி விற்பனையானது நடைபெற்று வருகிறது. முகமது நபி பிறந்தநாளை முன்னிட்டு, லாப நோக்கமின்றி பிரியாணி தயாரிக்கப்பட்டு 15 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக பள்ளி வாசல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மிலாடி நபி கொண்டாட்டம்

ஏழைகளுக்கு இலவசமாக பிரியாணி

மேலும், இஸ்லாமியர், இந்து, கிறிஸ்தவ மக்கள் என அனைத்துத் தரப்பினரும் குறைந்த விலையில் பிரியாணி வாங்கிச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளாக 'மிலாடி நபி விழா' கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு அரசின் வழிமுறைகளுக்கு உட்பட்டு, முகமது நபியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும், ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும் பிரியாணி வழங்கப்படுவதாகவும் தெரிவித்த பள்ளிவாசல் நிர்வாகிகள், கடைகளில் மட்டன் பிரியாணி ஒரு கிலோ 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இன்று பள்ளி வாசல் நிர்வாகத்தின் சார்பில், 850 ரூபாய்க்குப் பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றது என்று கூறியுள்ளனர்.

மழலையர்களின் கொண்டாட்டம்

இதன் ஒரு பகுதியாக, புனிதர் இறைதூதர் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை எடுத்துரைக்கும் விதமாகவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் கோவையில் உக்கடம், புல்லுக்காடு பகுதிகளில் அரபு பாடசாலையான மதரஸாக்களில் புனித குரான் படித்துவரும் மாணவர்கள், அனைவரும் ஊர்வலமாக சென்று பாட்டுகள் பாடியும், நடனங்கள் ஆடியும் நபிகளாரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

குறிப்பாக குழந்தைகள் கையில் தாளத்துடன் கேரள பாரம்பரிய "மாப்ள பாடலை" பாடிக்கொண்டே இசைத்தபடி குழந்தைகள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

இதையும் படிங்க: இஸ்லாத் மீதான பாசத்தை வெளிப்படுத்திய ஸ்டாலின்: மீலாதுன் நபி வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.