கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் வட்டாட்சியர் ராஜன், காவல் துறை ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வணிகர்கள் தாமாகவே முன்வந்து வால்பாறை பகுதியில் தொற்று பரவாமல் இருக்கும் வண்ணம் வால்பாறை பகுதியில் உள்ள தங்கள் கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்பதை கூறினார்கள்
இதனையேற்ற வட்டாட்சியர், தற்போது வால்பாறை பகுதியில் கரோனா வைரஸ் தொற்று இல்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிகர்கள் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம், தகுந்த இடைவெளி விட்டு பொருள்களை பெற்று செல்ல வேண்டும். இதனை மீறும்பட்சத்தில் கடைக்காரர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் - வால்பாறை வணிக நிர்வாக சங்கத்தினர்
கோயம்புத்தூர்: கரோனா தொற்று பரவாமல் இருக்கும் வண்ணம் வால்பாறை பகுதியில் உள்ள தங்கள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படும் என வணிகர்கள் கூறியுள்ளனர்.