ETV Bharat / state

வ.உ.சி. படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை

author img

By

Published : Sep 6, 2022, 7:07 AM IST

கோவை மத்திய சிறையில் வ.உ.சி. படத்துக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் வைகோ மரியாதை செலுத்தினார்.

வ.உ.சி. படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை
வ.உ.சி. படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை

கோவை: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளையொட்டி, கோவை மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கிற்கு வைகோ, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், வைகோவும் ஒருவரை சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் வைகோ பேசிய போது, மாடு இலுப்பது போல செக்கு இலுத்த கொடுமையும் நிகழ்ந்தது இந்த கோவை மத்திய சிறைசாலையில் தான் அந்த செக்கு இங்கு இருக்கிறது அதை தொட்டு பார்த்து வணக்கம் தெரிவிக்க தான் நான் வந்துள்ளேன் என்றார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் தொழிலாளர்களுக்கு போராட்டத்தை நடத்தியவர் வ.உ.சி. ஆவார். அதன் பின்பு கப்பல் வாங்குவதற்கு மும்பை நகரம் சென்று கப்பல் விற்பனையில் தொகை அதிகமாக இருக்கின்றது எனச் சொல்லி அந்த கப்பலின் உரிமையாளர் தயங்கிய போது தேசிய போராட்டத்திலே, விடுதலை போராட்டத்திலே திலகமாகத் திகழ்ந்து திழகரிடன் சென்று திலகரின் ஆதரவு பெற்று கப்பலை வாங்கி வந்த பிறகு இலங்கைக்குக் கப்பலை ஒட்டி சென்று வெற்றி பெற்றவர் நம் மண்ணில் பிறந்த வ.உ.சி.ஆவார்.

சித்தரவதைகள் அனுபவித்து இங்கிருந்து கண்ணூர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்த நூறுக்கும் மேற்பட்டோர் வந்துள்ளோம். ஆனால் அவர் விடுதலை பெற்று வரும் போது இரண்டு பெயர் மட்டும் வந்தார்கள்.

வ.உ.சியின் புகழ் இந்த மண் இருகின்ற வரைக்கும் இருக்கும் தமிழ் இருக்கும் வரைக்கும் இருக்கும் என்றார் வைகோ. கப்பல் ஓட்டிய தமிழனின் புகழ் நிலைத்திருக்கும் என கூறினார்

இதையும் படிங்க:ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.