ETV Bharat / state

நிலவில் கனிம வளங்கள் உள்ளதா? மயில்சாமி அண்ணாதுரை பதில்

author img

By

Published : Aug 30, 2019, 8:03 AM IST

கோவை: நிலவில் கனிம வளங்கள் உள்ளதா என்பது செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு தெரியவரும் என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

mayilsamy-annadurai-talks-about-santhirayan-2-status

சந்திராயன் ஏவுகணையின் முன்னாள் திட்ட இயக்குநரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரைக்கு பொள்ளாச்சி ரோட்டரி கிளப் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்வியில் மாணவர்கள் குறிக்கோளுடன் எதை நோக்கியும் பயணிக்க முடியும், அதற்கு ஏற்றவாறு கல்விக்கூடங்களில் செயல்முறைக் கல்வியை கற்பிக்க முடியும். அவ்வாறு ஆசிரியர்கள் செயல்முறைகளுக்கு விளக்கம் அளிக்கும்போது மாணவர்கள் புதிய, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள்.

மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திராயன்-2வில் உள்ள விக்ரம் ரேடர் நிலவில் எந்த இடத்தில் இறங்குவது, ஆய்வு செய்ய செல்லும் பாதை பாதுகாப்பாக உள்ளதா, எந்த திசையில் செல்வது என்பது குறித்து புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. நிலவில் கனிம வளங்கள் உள்ளதா என்பது செப்டம்பர் 7ஆம் தேதிக்கு மேல் நடைபெறும் ஆய்வுக்கு பின்னர் தெரிய வரும்” என்றார்.

Intro:annaduraiBody:annaduraiConclusion:நிலவில் கனிம வளங்கள் உள்ளதா என்பதை செப்டம்பர் 7ம் தேதிக்கு மேல் சந்திராயன் 2 விண்கலம் ஆய்வுக்குப்பின் தெரியவரும் பொள்ளாச்சியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

பொள்ளாச்சி - ஆக -29

பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தன்னார்வு தொண்டு நிறுவனமான ரோட்டரி கிளப் அமைப்பின் சார்பில் சந்திராயன் முன்னாள் திட்ட இயக்குனரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது, இந்த விழாவில் மயில்சாமி அண்ணாதுரை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது, அப்போது பள்ளி மாணவ மாணவியர் இடையே பேசினார், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கல்வியில் மாணவர்கள் குறிக்கோளுடன் எதை நோக்கி பயணிக்கலாம், அதற்கு ஏற்றவாறு கல்விக்கூடங்களில் வகுப்பறைகளில் படிக்காத விஷயங்களைத் தாண்டி செயல்முறை மூலம் செய்ய முடியும், மேலும் ஆசிரியர்கள் செயல்முறைகளும் விளக்கம் அளிக்கும் பொழுது மாணவர்கள் அதையும் தாண்டி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள், வின்னில் ஏவப்பட்டுள்ள சந்திராயன்-2வில் உள்ள விக்ரம் ரேடர் நிலவில் எந்த இடத்தில் இறங்குவது, ஆய்வு செய்ய செல்லும் பாதை பாதுகாப்பாக உள்ளதா எந்த திசையில் செல்வது என்பது குறித்து புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது, செப்டம்பர் 7ஆம் தேதிக்கு மேல் நிலவில் கனிமவளங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யத பின்பு தெரிய வரும் என்று தெரிவித்தார்,
பேட்டி - மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ விஞ்ஞானி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.