கோயம்புத்தூர் மாவட்டம் புறநகர் தெற்கு மாவட்ட திமுக பாரம் தூக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திமுக தொழிற்சங்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஆரூன் தலைமையில் மே தின பேரணி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கொடியேற்றி வைத்து தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தென்னை தொழில் சார்ந்த தொழிலாளர்கள் துரைஸ் திரையரங்கிலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகளில் பேரணி நடத்தினர். இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சண்முகசுந்தரம், நகர கழக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் ,தொழிற்சங்க செயலாளர் கன்னிச்சாமி, ராசு பெருந்தகை, ஞானவேல் ,ராஜ்குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.