கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கினால் பல்வேறு தொழிலாளர்களும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தச்சூழ்நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்து வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணமாக 10ஆயிரம் ரூபாய், அரசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கவேண்டும் என என மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சியினர் கோவை லாலி ரோடு பகுதியில் போராட்டம் நடத்தி அந்த வீடீயோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
ஊடங்கு அமலில் உள்ள நிலையில், போராட்டத்தை நடத்தியதற்காக அக்கட்சியின் கோவை மாநகர செயலாளர் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது ஊரடங்கு உத்தரவை மீறுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
மேலும், ஜெ.எம் 1 நீதிபதி அவரை அவிநாசி சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், சமூக இடைவெளியைப் பின்பற்றி மாநகர செயலாளர் வேல்முருகன் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு அவரை கைது செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது.
மற்ற மாநிலங்களில் ஆர்ப்பட்டாம் நடத்தப்பட்டதற்கு காவல்துறை எவ்வித அடக்குமுறைகளையும் செயல்படுத்தாத நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் காவல்துறை அடக்குமுறையைச் செயல்படுத்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார்.
இதையும் படிங்க: தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் உணவு வழங்கத் தடை