ETV Bharat / state

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு - யானையைப் பிடிக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் குதித்த மக்கள்! - கோயம்புத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே ஆழியார் நவமலைப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். எனவே, கூண்டு வைத்து யானையைப் பிடிக்க வேண்டும் என பொது மக்கள் சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
author img

By

Published : Nov 10, 2019, 4:53 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் நவமலைப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை, மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக அந்த ஒற்றைக் காட்டு யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி அர்த்தனாரி பாளையம் கிராமத்தில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தியதோடு விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரையும் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இன்று அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வனத் துறையினர் அனுப்பி வைத்தனர்.

யானையை பிடிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

காட்டு யானையின் அட்டகாசத்தை தாங்க முடியாத பொதுமக்கள் அந்த யானையை, உடனடியாகக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என நா.மூ. சுங்கம் என்னும் பகுதியில் மனிதச் சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டும் வாகனங்களை சிறைப் பிடித்தும் வருகின்றனர்.

மேலும், மறியல் நடக்கும் இடத்திற்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வருவாய்த் துறையினர், காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, காட்டு யானையைப் பிடிக்க, வனத் துறையினர் கோவை சாவடி பகுதியிலிருந்தும் டாப்-சிலிப் கோழிகுத்தி முகாமிலிருந்தும் கலீம், மாரியப்பன், சுயம்பு ஆகிய மூன்று கும்கி யானைகளை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு இரண்டு மூன்று தினங்களுக்குள் அந்த காட்டு யானையைப் பிடித்து, களியாறு முகாமில் கூண்டில் அடைக்க என வனத் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை: வாகன ஓட்டிகள் பீதி!

Intro:Body:

 ஒற்றை காட்டு யானையை பிடித்து வரகளியாறு கூண்டில்  வைத்து அடைப்பதற்காக டாப்சிலிப்பிலிருந்துகும்கி யானைகளை கலீம் ,மாரியப்பன் ,சுயம்பு யானைகள் கொண்டுவரப்படுகின்றன.மருத்துவ குழுவினரும் அர்த்தனாரி பாளையம் விரைந்து வந்து கொண்டிருக்கின்றனர். ஒற்றை காட்டு யானையை பிடித்து வரகளியாறு கொண்டு செல்ல தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ( Etv பாரத் முதல் தகவல்)

** பொள்ளாச்சி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு மேலும் ஒரு பெண் படுகாயம் 

உயிர்க்கொல்லி காட்டுயானை பிடிக்க கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளதாக வனத்துறை தகவல்.

பொள்ளாச்சி நவம்பர் 10

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் நவ மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஒற்றை காட்டு யானை மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. மலைவாழ் மக்களில் குடியிருப்பை சேர்ந்த மாகாளி என்ற முதிய வரையும் 6 வயது சிறுமி ஒருவரையும் தாக்கி கொன்றது. இதையடுத்து வனத்துறையினர் டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானைகளை கொண்டு வந்து ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

 இந்நிலையில் கடந்த சில தினங்களாக அந்த ஒற்றை காட்டு யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அர்த்தனாரி பாளையம் கிராமத்தில்  விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தது. நேற்று இரவு அர்த்தனாரி பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

 ஆனால் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி இன்று அதிகாலை அதே பகுதியில் பால் கரக்க சென்ற திரும்பாததால் என்ற மூதாட்டியை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் அனுப்பிவைத்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த காட்டு யானையை பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.  

இதையடுத்து வனத் துறையினர் கோவை சாவடி பகுதியிலிருந்தும் டாப்சிலிப் கோழிகுத்தி முகாமிலிருந்து கலீம், மாரியப்பன் மற்றும் சுயம்பு ஆகிய மூன்று கும்கி யானைகளை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு இரண்டு மூன்று தினங்களுக்குள் அந்த உயிர்க்கொல்லி காட்டு யானையை பிடித்து வரகளியாறு முகாமில் கூண்டில் அடைக்க படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேட்டி- பழனிச்சாமி(உறவினர்)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.