ETV Bharat / state

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு: ஒருவர் கைது - crime news

மூதாட்டியிடம் கரோனா நிதி தருவதாகக் கூறி ஐந்து சவரன் நகையை திருடிச் சென்ற நபர், வாகன சோதனையின்போது காவல் துறையினரிடம் சிக்கினார்.

காவல்துறையினரிடம் சிக்கிய கிருஷ்ணகுமார்
காவல்துறையினரிடம் சிக்கிய கிருஷ்ணகுமார்
author img

By

Published : Sep 20, 2021, 8:40 AM IST

கோவை: கோபிச்செட்டிப்பாளையம், வேலுமணி நகரைச் சேர்ந்தவர் சுந்தரி. இவரது வீட்டின் பின்பகுதியில் வசிக்கும் மில் தொழிலாளி கமலா, கடந்த மாதம் 22ஆம் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கள்ளிப்பட்டி பிரிவின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், கரோனா நிவாரண நிதி வந்துள்ளதாகவும், கமலாவின் வீட்டை புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய கமலாவும் அவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கவனத்தை திசை திருப்பி கொள்ளை

அப்போது வீட்டில் இருந்த சுந்தரியிடமும், 18 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அலுவலர்கள் நிதி கொடுக்க வீட்டுக்கு வரும்போது, நகை அணிந்திருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய சுந்தரி, தனது நகையை கழற்றி கட்டில் மெத்தைக்கு அடியில் வைத்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி ஐந்து சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து மாயமாகியுள்ளார். பின்னர் இதுகுறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில், கோபி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.18) கரட்டடிபாளையம் அருகே காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மூதாட்டி சுந்தரியை ஏமாற்றி நகையை கொள்ளையடித்தது அந்நபர் தான் என்பது உறுதியானது.

காவல்துறையினரிடம் சிக்கிய கிருஷ்ணகுமார்
காவல் துறையினரிடம் சிக்கிய கிருஷ்ணகுமார்

5 சவரன் நகை பறிமுதல்

பிடிபட்ட நபரான கிருஷ்ணகுமார், ஈச்சனாரியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டே நூதனத் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அவரைக் கைது செய்த காவல் துறையினர், ஐந்து சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் கிருஷ்ணகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: யாருமில்லா வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு... போலீஸ் வலை வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.