கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்களில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஓவியங்கள், தமிழர் காப்பியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காந்திபுரம் மேம்பாலத் தூணில் வரையப்பட்டு வந்த சிலப்பதிகார ஓவியத்தில் பொற்கொல்லர்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, விஸ்வஜன முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வேல்முருகன் என்பவர், நேற்று (பிப்.12) அந்த ஓவியங்களில் கருப்பு மையை ஊற்றி அழித்தார்.
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் காட்டூர் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அவர் மீது பொது சொத்தை சேதப்படுத்துதல் எனும் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிலப்பதிகார ஓவியங்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் நபர் யார்? - கோவையில் அதிர்ச்சி!