பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக கணபதி பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று, அவர் காவல் ஆய்வாளரை வீட்டில் இறக்கிவிட்டு, திரும்பி வரும்போது, அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினார்.
![பொள்ளாச்சியில் காவலரை தாக்கியவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9974069_cbe.jpg)
விசாரணையின்போது, இருவரும் திடீரென தலைமைக் காவலரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதுதொடர்பாக, ஆனைமலை காவல்நிலையத்தில் தலைமைக் காவலர் அளித்த புகாரின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் விஜயன் தலைமையில் உதவி ஆய்வாளர் சந்திரன் மற்றும் காவல்துறையினர் தலைமைறைவான இருவர் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆனைமலையைச் சேர்ந்த மணிகண்டன், சந்தோஷ் ஆகிய இருவரும் காவலரைத் தாக்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமியைத் திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது