ETV Bharat / state

லாட்டரி சீட்டு விற்பனை - இருவர் கைது

கோவை: வால்பாறை அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

lottery
author img

By

Published : Jul 25, 2019, 7:47 PM IST

தமிழ்நாடு முழுவதிலும் லாட்டரி சீட்டுகள் விற்பதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள சோலையார், முடீஸ், கேரளா எல்லைப் பகுதிகளில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் முடீஸ் பஜாரில் வால்பாறை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பெரியசாமி, ராஜூ ஆகிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இருவரும் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Intro:arrestBody:arrestConclusion:வால்பாறையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் , இரண்டு பேர் கைது.வால்பாறை- 25 வால்பாறையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்க்க காவல் துறையினர் தடை செய்து உள்ளனர் இதையடுத்து வால்பாறையில் சுற்றியுள்ள சோலையார், முடீஸ், கேரளா எல்லைமளுக்கு பாறை என பல பகுதியில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததைஅடுத்து முடிஸ் காவல் நிலைய எல்லை முடீஸ் பஜாரில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த பெரியசாமி, ராஜீ எனஇரண்டு நபர்களை வால்பாறை இன்ஸ்பெக்டர் S.முருகேசன் தலைமையில் காவல்துறையினர்கைது செய்தனர்.இவர்கள் விற்பனைக்காக வைத்துருந்த தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றியும் வழக்கு பதிவு செய்து வால்பாறை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.