ETV Bharat / state

தண்டவாளத்தில் சிக்கிய சரக்கு லாரி.. கேட் கீப்பரின் ஸ்மார்ட் ஐடியா!

கோவை அருகே ரயில் தண்டவாளத்தின் நடுவே சரக்கு லாரி சிக்கிக்கொண்டதை அறிந்த கேட் கீப்பர், துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 10, 2022, 4:27 PM IST

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளங்கள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தைவிட 1 அடி உயரமாக உள்ளது. அது அங்கு ஏற்கனவே இருந்த தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக உள்ளதால் அவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் அவ்வழியாக சரக்கு ஏற்றி வந்த லாரி தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது தண்டவாள உயரம் காரணமாக தண்டவாளத்தை கடக்க முடியாமல் தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்றது.

அந்நேரம் வந்த கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலுக்கு, கேட் கீப்பர் உடனடியாக சிகப்பு விளக்கை காண்பித்து லாரிக்கு 100 மீட்டர் முன்பாக ரயிலை நிறுத்தினார். இதன் காரணமாக லாரி மீது ரயில் மோதாமல் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ளி நகர்த்த முற்பட்டனர்.

ஆனால், லாரியில் 30 டன் அளவிற்கு சரக்கு இருந்ததால் ஒரு மணி நேரம் கடந்தும் நகர்த்த முடியாமல் போனது. இதையடுத்து லாரியின் பின் பக்கத்தில் இருந்து மற்றொரு டெம்போ மூலம் தள்ளி தண்டவாளத்தில் இருந்து லாரியை பொதுமக்கள் நகர்த்தினர்.
இதனால், பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பின் கோவை நோக்கி புறப்பட்டது.

தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட லாரி

இதே ரயில்வே கேட் பகுதியில் ஏற்கனவே தண்டவாள உயரம் காரணமாக 3 லாரிகள் தண்டவாளத்தில் நடுவே பழுதாகி நின்றது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக தண்டவளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடையை எதிர்த்து வழக்கு: நீதிமன்றம் உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.