ETV Bharat / state

தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ. 10 லட்சம் பணம் கொள்ளை - குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதுவுசெய்து விசாரணை

கோவை: மசக்களிபாளையத்தைச் சேர்ந்த தெழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை, 10 லட்சம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

house brokenhouse broken into by robbers into by robbers
house broken into by robbers
author img

By

Published : Jan 27, 2020, 2:04 PM IST

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகேயுள்ள மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதம்ஷா. இவர் கோவை பட்டனம் பகுதியில் இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 24ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன், தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நேற்று இரவு கோவை திரும்பிய அவர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பக்கவாட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100 சவரன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில், இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை

மேலும், கொள்ளை நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால், அப்பகுதியிலுள்ள பிற சிசிடிவி கேமராக்களைக் கொண்டு கொள்ளையர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் இல்லத் திருமணத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!

Intro:மசக்களிபாளையத்தில் 100 பவுன் நகை மற்றும் 10 லட்சம் பணம் கொள்ளை.Body:மசக்களிபாளையத்தில் 100 பவுன் நகை மற்றும் 10 லட்சம் பணம் கொள்ளை.

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதம்ஷா. கோவை பட்டனம் பகுதியில் இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். நேற்று இரவு கோவையில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்த போது, பக்கவாட்டுக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

வீட்டில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன. வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் தொகை மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தன. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் வீட்டில் சிசிடிவி இல்லாததால் காவல் துறையினர் தெருக்களில் உள்ள சிசிடிவி களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.