ETV Bharat / state

கோவையில் முழு ஊரடங்கு தொடங்கியதால் சாலையில் கூட்ட நெரிசல்!

author img

By

Published : Jul 25, 2020, 10:33 PM IST

கோவை: இன்று (ஜூலை25) மாலை முதல் முழு ஊரடங்கு தொடங்குவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

முழு ஊரடங்கால் சாலையில் கூட்ட நெரிசல்
முழு ஊரடங்கால் சாலையில் கூட்ட நெரிசல்

கோவை மாவட்டத்தில் இன்று(ஜூலை 25) மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்திருந்தார்.
இதனால் மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஐந்து மணிவரை செயல்பட்டன. காய்கறி மார்க்கெட்டு, உழவர் சந்தைகள் போன்ற பல இடங்களில் காலை முதல் கூட்ட நெரிசல் ஆனது தென்பட்டு வந்தது.

இந்நிலையில் மாலை 5 மணி அளவில் ஊரடங்கு அமலாக்கப்பட்டது. தொடர்ந்து நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒரே நேரத்தில் வீடு திரும்பினர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக உக்கடம் வழியாக குனியமுத்தூர், சுந்தராபுரம், போத்தனூர் செல்லும் மக்கள் அப்பகுதியில் ஒரே நேரத்தில் வந்ததால் அங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணி திரண்டு நெரிசலில் சிக்கின.

இதனால் அப்பகுதியே வாகன நெரிசல் நிறைந்து காணப்பட்டது. அதேசமயம் கோவையில் பல இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு ஐந்து மணிக்கு மேல் வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதமும் விதித்தனர். இதனால் மக்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க: தனியார் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மையம்: அமைச்சர் வீரமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.