கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய வால்பாறை பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, காட்டு மாடு, காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், காட்டு பகுதியை விட்டு அவ்வப்போது பொதுமக்கள் வசிக்கும் நகர பகுதிகளுக்கும் விலங்குகள் வரும்.
இதற்கிடையில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மூன்று சிறுத்தைகள் உலா வந்ததை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்தனர்.
இதையடுத்து நேற்று (ஜூலை 18) வனத்துறையினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறிய சிசிடிவி கேமராக்களை பொருத்தினர்.
சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினரும் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வால்பாறையில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகும் சிறுத்தைக் கூட்டம்!