கோவை: தமிழ்நாடு - கேரள எல்லையில் கோவை மாவட்டமும், பாலக்காடு மாவட்டமும் இணையும் இடத்தில் ஆனைகட்டி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள புதூர் அருகே உள்ள சீரக்கடவு பகுதியில் சிறுத்தை ஒன்று முள்வேளியில் சிக்கியிருப்பதாக கேரள மாநிலம், மன்னார்காடு அருகேயுள்ள அட்டப்பாடி சரக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்த போது, சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை முள்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுத்தையின் உடலை மீட்டுள்ள வனத்துறையினர், இன்று (ஏப். 13) அதன் உடலை உடற்கூராய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், காட்டுமாடுகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ள நிலையில், அவ்வப்போது யானைகள் மற்றும் சிறுத்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகியுள்ளது. சிறுத்தை உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை: மலைக் கிராமத்தில் குட்டிகளுடன் வந்து நீர் அருந்தும் காட்டு யானைகள்!