கிறிஸ்தவர்கள் மிக விமரிசையாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை, வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் உணவாக கேக் வழங்கப்படும். அதனால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவே பல கேக் கடைகளிலும், நட்சத்திர விடுதிகளிலும் கேக் தயாரிப்புப் பணிகள் மும்மரமாக நடைபெறும்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள உணவகத்தில் 75 கிலோ கிராம் உலர் பழங்கள், 24 லிட்டர் ஒயின் சேர்த்து கேக் கலவை செய்யப்பட்டது. இந்த கலவை கேக் 45 நாட்கள் கழித்து கேக்காக மாற்றப்படும் என்று, அந்த உணவகத்தின் சமையல் கலை வல்லுநர் அகலேஸ் பட்டேல் கூறினார்.
இதையும் படிங்க:
அதிமுக கொடிக்கம்பத்தால் ஏற்பட்ட விபத்தைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!