கோவை மாவட்டம் சோமனூரில் சூசைராஜ் என்பவருக்குச் சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இதில் வேலுச்சாமி என்பவர் வாடகைக்கு எடுத்து அட்டைப்பெட்டிகள் குடோன் வைத்துள்ளார். இந்தக் குடோனில் இன்று காலை 6.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைகள், நூல், காடா துணி போன்றவை தீயில் எரிந்து நாசமாகின. இந்தத் தீயானது வேகமாகப் பரவி அருகிலிருந்த சுதாகர் என்பவருக்குச் சொந்தமான மாவு கடையிலும் தீப்பிடித்தது.
தீ விபத்தில் கடை, குடோன் தீப்பற்றி எரியும் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைத்தனர். சூலூர், கோவை தீயணைப்பு நிலையங்களிலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீ அணைக்கப்பட்டது.
விபத்தில் பல லட்சம் மதிப்புடைய பொருள்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படியுங்க: