கோவை சாடிவயல் பகுதியில் உள்ள கும்கி யானைகள் முகாமில், கும்கி யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாம் நேற்று துவங்கியது. சாடிவயல் முகாமில் உள்ள சுயம்பு, வெங்கடேஷ் ஆகிய இரண்டு யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கால்களுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் முகாம் தொடக்கத்தை கொண்டாடும் வகையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து யானைகளுக்கு பிடித்த உணவுகளான தென்னை, வாழை, உருண்டை வெல்லம் ஆகியவை உணவாக கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற உள்ள நல்வாழ்வு முகாமில் யானைகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, பசுந்தீவனங்கள் வழங்கப்படும் மேலும் இரு யானைகளுக்கும் தேவையான மருந்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது.
முன்னதாக நடைபெற்ற சிறப்பு நல்வாழ்வு முகாமினை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார், போளுவம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி , வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை.!