Tamil Nadu Latest News Update: கோவை காளப்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறஉள்ள தனியார் திருமண மண்டபத்தை அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 30ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற இருப்பதாகவும், இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நேருவால் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதாகவும், போரை தொடர்ந்து நடத்தி இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருந்திருக்காது என அமித்ஷா பேசியிருக்கிறார். அதே போல நிதியமைச்சரும் வரலாறு தெரியாமல் தவறான தகவல்களை சொல்லி வருவதாகவும் சாடினார். காஷ்மீர் சரித்திரத்தை அமித்ஷா மாற்ற முயற்சிப்பதாகவும், சர்வாதிகாரிகள் வரலாற்றை மாற்ற தான் முயல்வார்கள் என்றார். காஷ்மீர் விவகாரத்தில் ஜின்னாவின் வேண்டுகோளை ஏற்காமல் நேருவின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டு வருவதாகவும், 25ஆம் தேதி விருப்ப மனு மீது பரிசீலனை நடைபெறும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். இடைத்தேர்தலில் குமரி ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு உள்ளதால், அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கேட்பாரற்றுக் கிடக்கிறது; அவர்களை சீண்டுவதால் யாரும் பெரிய ஆளாகி விட முடியாது என்றும் அதிமுக தனது உரிமைகளை பாஜகவிடம் விட்டுக் கொடுத்து இருப்பதாகவும் சாடினார்.
புதிய தமிழகம் கட்சியினர் கொலை மிரட்டல் - முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா புகார்