ETV Bharat / state

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் தனித்துப் போட்டி! - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட இருப்பதாகவும், தங்களுடன் யாரும் கூட்டணி பேசவில்லை, தாங்களும் யாருடனும் பேசவில்லை எனவும் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

puthiya tamilagam party krishnasamy
புதிய தமிழகம் தனித்து போட்டி
author img

By

Published : Nov 25, 2021, 4:55 PM IST

கோயம்புத்தூர்: குனியமுத்தூர் பகுதியில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவையில் கடந்த 22, 23ஆம் தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் 92 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் 100 கோடி ரூபாய் வரை ஒப்பந்தங்கள் போடப்பட்டன. புதிய தொழில்கள் குறித்து அறிவிப்புகள் கொடுத்தாலும் செயல்பாட்டுக்கு வருவதில்லை. கோவை தனது தொழில் முகவரியை இழந்துவருகிறது.

தொழில் துறையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருப்பதை மறு சீரமைப்பதற்கான அறிவிப்புகள் முதலீட்டாளர் மாநாட்டில் இல்லை. நிரந்தரமாக சிறு, குறு தொழில்கள் சிறப்பு பெற்றிருந்த மாவட்டமாக மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய தமிழகம் தனித்துப் போட்டி

ஆறு வழிச் சாலை

கோவையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் சிறு, குறு தொழில்முனைவோருக்குப் பலனில்லை. சிறு முதலீட்டாளர்கள் கருத்தைக் கேட்டு ஜனவரி முதல் வாரத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கருத்தரங்கம் நடத்த முடிவெடுத்துள்ளோம். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பழைய நிலையை ஏற்படுத்த வேண்டும்.

நல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கோவை - திண்டுக்கல் சாலையை ஆறு வழிச் சாலையாகவோ, எட்டு வழிச் சாலையாகவோ மாற்ற வேண்டும். கோவை திருச்சி சாலையையும் எட்டு வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும்.

துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி

2011-க்கு பின்பு பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டுவருகின்றது. தற்போது, பெரும்பாலான மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும்.

ஆடு திருடர்களைப் பிடிக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கொலைசெய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம். இதில் 10, 14 வயது சிறுவர்கள் எப்படி திடகாத்திரமான உதவி ஆய்வாளரை கொலைசெய்ய முடியும். காவல் துறையினர் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பது, மேலும் புது சிக்கலை ஏற்படுத்தும்.

இந்துக்கள் ஒருங்கிணைப்பு மாநாடு

இதில் சரியான பாதையை காவல் துறையினர் எடுக்க வேண்டும். டிசம்பர் 15 முதல் கட்சியின் வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக உலக இந்துக்கள் ஒருங்கிணைப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்தே போட்டியிட உள்ளது. எங்களுடன் யாரும் கூட்டணி பேசவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை" என்றார்.

இதையும் படிங்க: அண்ணா பிறந்த நாள்; 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - வெளியானது அரசாணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.