விஜயதசமி திருநாளில் வருடந்தோறும் ஐயப்பன் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். அதில் குழந்தைகளை அழைத்து வந்து குழந்தைகளின் விரலில் அரிசியிலும், நாக்கிலும் எழுத்துகள் எழுதுவர். இதனால் குழந்தைகளின் படிப்பறிவு பேச்சுத்திறன் அதிகமாகும் என்று ஆதிக்காலத்தில் இருந்து நம்பப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த வருடமும் விஜயதசமி திருநாளான இன்று கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளாக கலந்துகொண்ட பக்தர்கள் குழந்தைகளை அழைத்து வந்து அரிசியில் எழுத்துகள் எழுதினர். இம்முறை கரோனா என்பதால் நாக்கில் எழுதும் முறை தவிர்க்கப்பட்டது.
அதே சமயம் கோயில்களில் கூட்டம் சேர கூடாது என்று அரசு கூறியிருக்கும் நிலையில் இன்று சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பெரும்பாலான மக்கள் காலையிலிருந்து வரிசையில் நின்று நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனால் அரசு கூறியிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை தவிர்க்கப்பட்டது போல் காட்சி அளித்தது.
இதுகுறித்து பேசிய பொதுமக்களில் சசிகலா என்பவர், இன்று கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோயில் நிர்வாகம் இன்னும் நன்முறையில் ஏற்பாடுகளை செய்து இருக்கலாம். தகுந்த இடைவெளி என்பது தற்பொழுது குறைவாக காணப்படுகிறது. மேலும் அரிசியில் எழுதும் ஐயர்கள்(குருக்கள்) குறைவாகவே இருந்தனர். அவர்கள் அதிகமாக இருந்திருந்தால் கூட்டம் என்பது சிறிது தவிர்க்கப்பட்டிருக்கும் என்றார்.
![தனிமனித இடைவெளியின்றி மக்கள் கூட்டமாக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-vidhyaarambam-visu-tn10027_26102020123226_2610f_00724_1067.jpg)
இதையும் படிங்க: