கோவை மாவட்டம் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் தலைமையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமனது வால்பாறை பிரதான சாலையான நல்லகாத்து பாலம் அருகில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள், மூன்று காளைகளுக்கும் கோமாரி, கால்வாய் நோய் அதாவது நேஷனல் அனில் கன்ரோல் கடந்த 28ஆம் தேதி முதல் வரும் 13ஆம் வரை ஒன்று, நான்கு வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கும் இந்த மருத்துவ முகாமில் சினை பிடிப்புள்ள மாடுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
இதுவரை இதில் கலந்துகொண்ட ஏராளமான கால்நடை வளர்ப்பவர்களுக்கு, மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கியதோடு பராமரிப்பு போன்ற சிறப்பான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கால்நடைமருத்துவர் மெய்யரசன் கூறினார். முகாமில் கால்நடை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: இனாம்காரியந்தல் ஊராட்சியில் புதிய கால்நடை கிளை நிலையம் திறப்பு