ETV Bharat / state

பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் ஈபிஎஸ் தரப்பு கட்சி நடத்துகிறது - கோவை செல்வராஜ் - Coimbatore

ஈபிஎஸ் தரப்பு பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் கட்சியை நடத்திக் கொண்டிருப்பதாக கோவை மாநகர மாவட்ட செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் ஈபிஎஸ் தரப்பு கட்சியை நடத்துகிறது - ஏகே செல்வராஜ்

author img

By

Published : Aug 5, 2022, 10:29 AM IST

கோவை: ஓபிஎஸ் ஆதரவாளரும், கோவை மாநகர மாவட்ட செயலாளர் ஆக பொறுப்பேற்றுள்ள ஏகே செல்வராஜ் அவிநாசி சாலை அண்ணா சிலை சிக்னலில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக எம் ஜி ஆர், ஜெயலலிதா வைத்திருந்தார்கள். ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் படுதோல்வியை சந்திக்க வைத்தனர். இவர்களெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களான காரணத்தினால் தான் கோவை மாவட்டத்தில் கட்சி அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அதனை கட்டிக் காப்பதற்காக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமபுறம் லன்கள் முழுவதும் சைக்கிள் பேரணி எனது தலைமையில் நடத்த உள்ளோம். செப்டம்பர் மாதத்தில் ஓபிஎஸ் தலைமையில் வ.உ.சி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். கடந்த 11ஆம் தேதி அவர்கள் நடத்திய பொதுக்குழு செல்லாத பொதுக்குழு. அதில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்தது செல்லவில்லை, அவரால் நியமிக்கப்பட்டதும், நீக்கப்பட்டதும் செல்லவில்லை.

இவர்கள் கூறியதையும் தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனவே இவர்கள் பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் பட்டாவோடு அதிமுகவை நடத்தி வருகிறார். அதிமுக என்பது ஒருங்கிணைப்பாளர் தலைமையில் உள்ள இயக்கம். இவர்களுக்கு இன்னும் எவ்வித அங்கீகாரமும் அளிக்கப்படாததால் 72 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறோம்.

பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல் ஈபிஎஸ் தரப்பு கட்சியை நடத்துகிறது - ஏகே செல்வராஜ்

அவர்களுக்கும் அதிமுகவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 20ஆம் தேதிக்கு மேல் ஓபிஎஸ் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் துவங்க இருக்கிறார்.

கட்சி் அலுவலகம் இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வாங்கியது கிடையாது. அலுவலகத்தை பி.எஸ்.ஜி நிறுவனத்தை சார்ந்த வரதராஜ் என்பவர் எம்ஜிஆர் இருந்த தானமாக கொடுத்தார். நாங்கள் தனியாகவே அலுவலகம் அமைத்து செயல்பட உள்ளோம். அதிமுகவில் ஒரு கோடியே 52 லட்சம் பேர் உறுப்பினர் கார்டு வாங்கி உள்ளனர். அதில் அனைவரும் அவர்கள் பக்கம் கிடையாது. அதிமுக தொண்டர்கள் நடுநிலையோடு இருக்கிறார்கள்.

சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதற்காக எடப்பாடியார் டிராமா போடுகிறார். மூன்று மாதத்தில் தொண்டர்கள் உள்ள கட்சியை ஓபிஎஸ் நடத்துவார். குண்டர்கள் கொண்ட கட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் பட்டியல் கொடுக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து ஆக வேண்டும்.

அவர்கள் சிறைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. பன்னீர்செல்வம் நடத்துவது தான் அதிமுக. பாஜக தோழமை கட்சி தான், பாஜக சொல்வதைக் கேட்டு செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு வேறு, பாஜக கட்சி வேறு" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை மாணவி தற்கொலை வழக்கு: மேலும் இருவர் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.