கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (20). இவர் அவரது தாய், பாட்டியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அரவிந்தன் தனது பாட்டி, தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் தராததால் மனமுடைந்து யாருக்கும் தெரியாமல் சானி பவுடர் குடித்துவிட்டு வீட்டின் அருகில் மயங்கி கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி அக்கம்பக்கத்தினரை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இந்நிலையில், அரவிந்தன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதே போல் தடாகம் பகுதி சோமையனூரில் சுசித்ரா(37) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீராத தலை வலியால் அவதிபட்டு வந்த நிலையில் நேற்று சானி பவுடரை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவங்கள் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.