கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி பூனை, கோழி, மாடு உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை தாக்கிவருவது வடிக்கையாகவும் இருக்கிறது.
இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள ஸ்டான்மோர் எஸ்டேட் பகுதியில், பகல் வேளையில் மாடுகளை வேட்டையாடி அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று மாலை அப்பகுதியிலுள்ள தேயிலைக் காட்டில் ஒரு சிறுத்தைப் புலி இறந்து கிடந்ததுள்ளது.
அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வனவர் சக்திவேல் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி வனத்துறையினரின் உதவி மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவரின் உடற்கூறாய்வுக்கு பின்னர் சிறுத்தையின் சடலத்தை தீ மூட்டி எரித்தனர். நான்கு வயது பெண் சிறுத்தைப் புலி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தவறுதலாக வைரலான வீடியோ... வனத்துறையினர் விசாரணை!