கோவையில் இன்று (செப்.2) 579 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 662ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 217 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 78ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் இன்று ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 306ஆக உயர்ந்துள்ளது.