கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த முல்லை நகர் பகுதியில் வசிக்கும் கமலா தனது மகன் தீபன் சக்கரவர்த்தியுடன் கடந்த 22ஆம் தேதி அன்று சமத்தூர் அருகே உள்ள எஸ் பொன்னாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மொட்டை மாடி வழியாக நுழைந்து வீட்டினுள் பீரோவில் இருந்த நகை உட்பட 50 ஆயிரம் ரொக்கம், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அடுத்த நாள் அதிகாலை (செப் 23) வீட்டிற்கு வந்த கமலா, மகன் தீபன் பீரோ உடைக்கப்பட்டு பணம், நகை திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து கமலா கொடுத்த புகரின் பேரில் காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட அந்த அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நடந்திருக்கும் இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!