கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காவலர் பயிற்சிப் பள்ளியில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இது வரை இவ்வழக்கு சம்பந்தமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நேர்முக உதவியாளர் பூங்குன்றன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகன் அதிமுக பிரமுகர்கள் அனுபவ் ரவி, சஜீவன், அவரது சகோதரர்கள் உள்ளிட்டப் பலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீரிலிருந்து கையெறிகுண்டுடன் பயணம்.. தமிழக ராணுவ வீரரிடம் விசாரணை...