கோயம்புத்தூர் சுக்கிரவார் பேட்டையில் தொடங்கி ராஜவீதி வழியாகச் சென்று கோவையின் ஐந்து முக்கில் உள்ள செளடாம்பிகை கோயில் வரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கத்தி போட்டபடி, 'தீஸ்கோ தள்ளி' என்ற வார்த்தையைக் கூறிக்கொண்டே சென்றனர்.
இந்நிகழ்ச்சியை பற்றி செளடாம்பிகை கோயில் தலைவர் பாலு கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு பராகத்தி விழா நடைபெறும். செளடேஸ்வரி அம்மனை மாவு கலசத்தில் வைத்து அழைத்து வருவோம். ஆண்டிற்கு ஆண்டு இளைஞர்கள் பலர் இந்த நிகழ்வில் அதிகம் கலந்துகொள்கின்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் விரதம் இருந்து கத்தி போட்டு விரதத்தை கலைத்துக்கொள்வர். இதில் மிக முக்கியமான நிகழ்வாக 20க்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்களால் தயாரான மஞ்சள் பொடியைத் தூவியும்; பட்ட காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் கத்திபோடும் நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக விழா தலைவர் கூறினார்.
இதையும் படிங்க : மாணவர்களின் கலை நிகழ்ச்சியோடு கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா!