ETV Bharat / state

"தோல்வி பயம் பாஜகவுக்கா?.. கனிமொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதா...? வெற்று அறிக்கை மட்டும் வெளியிடுவதா.."- வானதி சீனிவாசன்!

ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்காமல் வெற்று அறிக்கை மட்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

just-an-empty-statement-without-empowering-women
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 8:24 AM IST

கோயம்புத்தூர்: பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதாவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த 9 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாது, சாதி வேறுபாடுகளற்ற சமத்துவமும், பாலின சமத்துவமும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள்.

பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவதாகும். காலம் கடந்து செய்தாலும், கண் துடைப்புக்காக செய்தாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக சார்பில் ஆதரிக்கிறேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஸ்டாலின் தலைவராக உள்ள திமுகவிலும், அவர் முதலமைச்சராக உள்ள தமிழக அரசிலும் பாலின சமத்துவமும் இருக்கிறதா என்றால், மனசாட்சி உள்ள யாரும் இல்லை என்றே சொல்வார்கள். கருணாநிதியால் அரசியலில் அடையாளப்படுத்தப்பட்ட கனிமொழி, பெண் என்பதாலேயே திமுகவில் ஓரங்கட்டப்பட்டு உள்ளார்.

ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை தாங்கும் அளவுக்கு திறமை இருந்தும், அவருக்கு பத்தோடு பதினொன்றாக துணைப் பொதுச்செயலர் பதவிதான். அதுபோல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மகள் இருந்தும், மகனைத்தான் அரசியலுக்கு கொண்டு வந்து திமுக இளைஞரணிச் செயலாளராக, அமைச்சாரக்கி உள்ளார்.

ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரான வாரிசு அரசியலில் கூட, பெண்களை ஒதுக்கி விட்டு ஆண் வாரிசுக்கு மட்டுமே மகுடம் சூட்டியவர்கள்தான் இன்று பாலின சமத்துவம் பற்றி பேசுகிறார்கள். எல்லாம் வெறும் பேச்சு மட்டுமே. முதலமைச்சரையும் சேர்த்து 35 பேர் கொண்ட திமுக அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண்கள்.

அமைச்சரவை பட்டியலில் 35-வது இடத்தில் அதுவும் கடைசி இடத்தில் இருப்பவர் பெண் அமைச்சர் கயல்விழி. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இப்படி அமைச்சரவையில் பெண்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்காமல், பட்டியலின பெண் அமைச்சரை கடைசி இடத்தில் வைத்துவிட்டு, கொஞ்சமும் கூசாமல், பாலின சமத்துவம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அமைச்சரவையில் 11 பெண்கள் உள்ளனர். நிதி போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களாகவும் பெண்கள் உள்ளனர். மாநில ஆளுநர்களாகவும் பெண்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலின ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளிப்பதுதான் பாலின சமத்துவம்.

பெண்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ளும் அதிகாரத்தை அளிப்பது சமூக நீதி. இவற்றை செய்யாமல், பாலின சமத்துவம், சமூக நீதி என பேசிக் கொண்டே, பெண்களுக்கான அதிகாரத்தை மறுக்கிறது திமுக. திமுக என்பது வாரிசு, ஊழலில் திளைக்கும் கட்சி. வாரிசு என்றாலே அங்கு ஆணாதிக்கம் வந்துவிடும்.

பெண்களுக்கு உரிமை மறுக்கப்படும். எனவே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்ததால், இந்திய வரலாற்றில் மகத்தான இடத்தை பிடித்ததோடு, மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களின் மனங்களையும் பிரதமர் மோடி வென்றுள்ளார். இதை பொறுக்க முடியாமல் வழக்கம்போல, வன்மத்தை கக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். முடிந்தால் திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் வழங்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நிறைவேறும் நீண்ட நாள் கனவு! மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வரலாற்றில் கடந்து வந்த பாதை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.