உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் இறந்த பெண்ணின் உடலை உறவினர்களிடம் கூட வழங்காமல் காவல்துறையினர் எரித்துவிட்டனர்.
இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களையும் செய்தி சேகரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் தாண்டி செய்தி எடுக்க சென்ற பெண் ஊடகவியலாளர் மற்றும் ஒளிப்பதிவாளரையும் அங்குள்ள காவல்துறையினர் தடுத்தனர்.
இந்நிலையில் செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த காவல்துறை, உத்தரப் பிரதேச அரசைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும், காவல்துறையினரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை - வெளியான சிசிடிவி காட்சி