மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனைக் கொண்டாடும் வகையில் கோவை, திருச்சி சாலையில் உள்ள அம்மா மாளிகையில் 50-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனை ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு, இஸ்திரி பெட்டிகள், தையல் கருவிகள் போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமைச்சருடன் பல்வேறு திமுக தலைவர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் அவர் பேசியதாவது: ”அதிமுக அரசு என்றும் மக்களுக்கான அரசு. மக்களுக்கு எந்தவித உதவி என்றாலும், அதை உடனடியாக நிறைவேற்றக்கூடிய அரசு, அதிமுக அரசு என்று கூறினார். மேலும் மக்களுக்கு நன்மை தரும் வகையில் கோவையில் பல்வேறு நலத்திட்டங்களை நடைபெற்றுவருவதாகவும் சாலைகள் விரிவாக்கம் மேம்பாலம் போன்றவை அனைத்தும் மக்களுக்காக கொண்டுவரப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: '21ஆம் நூற்றாண்டிலும் சாதிய வன்கொடுமைகள்... ஜனநாயக சக்திகளே வெட்கி தலைகுனிக!'