தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான அலுவலகங்கள், ஜெபக் கூட்டங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் நேற்று (ஜனவரி 20) முதல் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கோவையில் அவருக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம் அருகிலுள்ள பெதஸ்தா ஜெப மண்டபம், லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்துவ பள்ளி மற்றும் அவரது வீட்டில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று (ஜனவரி 21) இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. இதனால் பல்கலைக்கழகத்தை சுற்றிலும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காருண்யா கிறிஸ்தவ பள்ளி பகுதிகளிலும் காவல்துறையினர் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.