ETV Bharat / state

சினிமாவில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது - நடிகர் சந்தானம் அறிவுரை

இம்மாதம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ள "டிடி ரிட்டர்ன்ஸ்" படத்தின் சார்பாக, கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார், நடிகர் சந்தானம். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நகைச்சுவையோடு பதிலளித்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 19, 2023, 6:08 PM IST

நடிகர் சந்தானம் செய்தியாளர்கள் சந்திப்பு

கோவை: நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள படம் "டிடி ரிட்டர்ன்ஸ்". இப்படம் இம்மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருக்கிறது. இது ஒரு வித்தியாசமான பேய் படம். இப்படம் திகில் கலந்த ஒரு நகைச்சுவை படம் என்பதால் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும்.

தற்போது மக்களிடம் பேய் குறித்து பயம் காணப்படுவதில்லை, குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேய்ப் படங்களைக் கண்டு சிரிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்கிறார்கள். இந்தப் படமும் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாகத்தான் இருக்கும். படத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை மக்கள் சிரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். இந்தப் படம் வெற்றி பெற்றால் இதன் தொடர்ச்சி வெளியாகும்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சந்தானம், நகைச்சுவை நடிகர் சந்தானமா? கதாநாயகன் சந்தானமா? என கேட்ட கேள்விக்கு, "இட்லி வேண்டுமா தோசை வேண்டுமா என்பது போல இருக்கிறது" என நகைச்சுவையுடன் பதிலளித்தார். நகைச்சுவை நடிகராக இருந்தபோது எவ்வித கவலையும் இல்லாமல் இருந்ததாகவும், தற்போது கதாநாயகனாக நடிப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தேவை உள்ளது எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சந்தானம், "மீண்டும் நல்ல கதையும், கதாப்பாத்திரமும் அமைந்தால், பெரிய நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகராக இணைந்து நடிப்பேன். இன்றைய கால கட்டத்தில் கதைதான் நாயகன்களை உருவாக்குகிறது. கதை நன்றாக இருந்தால், நிச்சயம் படங்கள் வெற்றி பெறும்

சொந்தப் படம் தயாரிப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. தற்போது நடிகராக நடிப்பதில் எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதுவரை யாரும் நடித்திராத வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளைத் தவிர்ப்பது நல்லது" என செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தொடர்ந்து காலையில் மது அருந்துவோர் குறித்த அமைச்சர் முத்துசாமியின் கருத்து தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சந்தானம், தான் 'டிடி ரிட்டன்ஸ்' படத்தை குறித்து பேச வந்துள்ளதாகவும், இது தொடர்பாக தான் பதில் அளித்தால் காலையிலேயே தான் மது அருந்திவிட்டு வந்திருக்கலாம் என மக்கள் நினைப்பார்கள் எனவும்; தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார், நடிகர் சந்தானம்.

இதையும் படிங்க: Merry Christmas - விஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்' பட வெளியீட்டுத்தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.