ETV Bharat / state

இஸ்ரேலில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கோவை வருகை - இதுவரை 132 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்!

Israel-Palestine war attack: இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் காரணமாக இஸ்ரேலில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த 4 நபர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வரவேற்றனர்.

Israel - Palestine war attack:
இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் தாக்குதல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 1:43 PM IST

Updated : Oct 18, 2023, 2:21 PM IST

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

கோயம்புத்தூர்: இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் திவீரமாக நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசும், மத்திய அரசுடன் இணைந்து தமிழர்களை அழைத்து வருகிறது.

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் படி,

    இஸ்ரேலில் இருந்து அழைத்து வரப்பட்ட 4 தமிழர்கள் இன்று கோயம்பத்தூர் விமானம் நிலையம் வந்தடைந்தனர்,அவர்களை சொந்த ஊருக்கு செல்ல அரசு சார்பில் வாகன ஏற்பாடு செய்து வழி அனுப்பி வைத்தோம்.@Udhaystalin | @arivalayam pic.twitter.com/yScNE61suW

    — Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) (@GingeeMasthan) October 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்படி இன்று கோவை விமான நிலையத்திற்கு 4 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், ‘இஸ்ரேலில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு 132 பேர் அழைத்து வரப்பட்டு உள்ளார்கள். இன்று 4 பேர் வந்தடைந்துள்ள நிலையில், கோவை விமான நிலையத்திற்கு மட்டும் மொத்தம் 25 பேர் வந்து உள்ளார்கள்.

மேலும், இஸ்ரேலில் இருந்து தொடர்பு கொள்பவர்களை அழைத்து வந்து, அவர்கள் இல்லம் வரை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சிலரை நாங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். பிற நாட்டவர்கள் எங்களுடன் இருந்து, அவர்களின் நாட்டிற்கு செல்லும் பொழுது எங்களுக்கும் அச்சம் ஏற்படுவதாகவும் தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறோம் என தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் சார்பில் 120 பேருக்கு விமானக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 12 பேர் சொந்த செலவில் திரும்பி உள்ளனர். மேலும், அங்கு இருப்பவர்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் நாம் அழைப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளதாக” அமைச்சர் கூறினார்.

மேலும், “அந்த நபர்களின் உறவினர்கள் தேவைப்படுகின்ற பட்சத்தில், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்களின் விபரம் பெரும்பாலும் பதிவில்லாமல் இருந்தது.

அதனால்தான் அயலகத் தமிழக வாரியத்தில் பதிவு செய்து செல்லும் நிலையை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் இனிவரும் காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் எத்தனை பேர் உள்ளார்கள் என்ற விபரங்களை அறியக்கூடும்” என தெரிவித்தார்.

பின், இஸ்ரேலில் இருந்து திரும்பிய வசீம் என்ற மாணவர் கூறுகையில், ‘தங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டது. வெளிநாடு தமிழர்கள் அமைப்புகள் தங்களைப் பத்திரமாக அழைத்து வந்தனர். தற்போதும் அங்கு தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இனிமேல்தான் தங்களுக்கு பிரச்னை வரும் என்பதால், அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்துக் கொண்டே செல்வதால், தமிழகத்திற்கு வர வேண்டிய தேவை உருவானது. நாங்கள் இஸ்ரேல் விமான நிலையத்தில் இருக்கும் போதும் மிசைல் வெடித்தது. உடனடியாக நாங்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விட்டதாக’ தெரிவித்தார்.

இதையும் படிங்க:இலங்கை கடற்கொள்ளையர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக நாகை மீனவர்கள் குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

Last Updated : Oct 18, 2023, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.