கோயம்புத்தூர் மாவட்டம் கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி . இவரது மகன் கார்த்தி என்கிற தேங்காய்பால் கார்த்தி (36 ). கார்த்தி மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் இவர் சில மாதங்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று கடை வீதி காவல் நிலையத்தினர் கார்த்தி மீது கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்து, காவல் நிலையத்தில் இருந்து நீதிபதி வீட்டிற்கு அழைத்துச்செல்லும் வழியில் திடீரென கார்த்தி மயங்கி விழுந்து இறந்தார்.
காவல்துறையினர் கார்த்தி வலிப்பு வந்து இறந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் கார்த்தி சயனைடு சாப்பிட்டு இறந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். எனினும் எவ்வாறு உயிரிழந்தார் என்பது உடற்கூறாய்விற்கு பிறகே தெரிய வரும்.
காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்ததால் இச்சம்பவம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற இருக்கிறது.