ETV Bharat / state

புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 25 நாடுகளுக்கு 65 நாள் பயணம்! - 65 நாள் பயணம்

கோவை: சர்வதேச புலிகள் தினத்தையொட்டி உலகளவில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு விழிப்புணர்வு குறித்த பேரணிகள்,நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

25 நாடுகளுக்கு 65 நாள் பயணம்
author img

By

Published : Jul 29, 2019, 8:34 PM IST

உலகம் முழுவதும் 2010ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் உலகளவில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில், உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, கோவை சிஎம்எஸ் கல்லூரியின் சார்பில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

INTERNATIONAL  TIGERS DAY
புலிகள் குறித்த விழிபூணர்வு ஏற்படுத்த புலி முகமூடி அணிவகுப்பு

அப்போது WTF அமைப்பு உலகளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 4000 என்பதை வலியுறுத்தும் விதமாக WTF 4000 என்ற வரைபடத்தை போன்று மாணவ, மாணவிகள் புலிகளின் முகமூடி அணிந்து அணிவகுத்து நின்றனர். இதைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த கௌதம் மேனன், பால் ஆகியோர் புலிகள் பாதுகாப்பை வலியுறுத்தி கார் மூலம் தங்கள் பயணத்தை தொடங்கினர்.

INTERNATIONAL  TIGERS DAY
புலிகள் முக்கியத்துவம் குறித்த விழிபுணர்வு பேரணியில் பொள்ளாச்சி,சத்யமங்கலதை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர்

கார் மூலம் உலகை சுற்றி வந்த கோவையைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண் இதனை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பயணமானது கோவையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக சீனா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, ஹங்கேரி, ஜெர்மன், இத்தாலி என சுமார் 24 நாடுகளில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு பிரான்ஸில் முடிவடைகிறது.

65 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் சுமார் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க இருப்பதாக உலக புலிகள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். புலிகள் பாதுகாப்பில் அனைத்து தரப்பினரும் கைகோர்க்க வேண்டும் என இதில் பங்கேற்ற மாணவ மாணவிகள் வலியுறுத்தினர்.

'சர்வதேச புலிகள்' தினத்தையொட்டி விழிபுணர்வு பேரணிகள்

இதேபோல், காடுகளை காப்பது, புலிகளை அழிவிலிருந்து மீட்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பொள்ளாச்சி வனத்துறை சார்பில் புலிகள் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வனத்துறை வேட்டை தடுப்புக் காவலர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

மேலும், சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் புலிகள், சிறுத்தை, யானைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் அரசுப்பள்ளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

Intro:tigerBody:tigerConclusion:காடுகளை காப்பது புலிகளை அழிவிலிருந்து மீட்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பொள்ளாச்சி வனத்துறை சார்பில் புலிகள் தின விழிப்புணர்வு பேரணி தனியார் கல்லூரி, பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.

பொள்ளாச்சி ஜூலை : 29

உலகம் முழுவதும் 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை 21ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது புலிகளின் வழித்தடத்தை காப்பது. புலிகளின் வாழ்க்கைமுறை அறிந்து கொள்ளுதல். எண்ணிக்கை அதிகரிப்பது புலிகளை காப்பதன் மூலம் வளத்தையும் வனத்தில் வாழும் உயிரினத்தையும் காக்க முடியும் போன்ற காரணங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. புலிகள் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள். தேசிய மாணவர் படை மாணவர்கள். வனத் துறை சார்பாக வேட்டை தடுப்பு காவலர்கள். இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் துவக்கி வைத்தார். ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, வனச்சரகர் காசிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியானது மகாலிங்கம் கல்லூரியில் தொடங்கி பாலக்காடு சாலையில் வழியாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து. 2018 புலிகள் கணக்கெடுப்பில் இந்தியாவில் மொத்தம் 2965 புலிகள் இருப்பதாக இன்று பாரதப் பிரதமர் அறிவித்துள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.