ETV Bharat / state

மின் இணைப்பிற்கு கையூட்டு கேட்ட இடைத்தரகர்: வைரலாகும் ஆடியோ - கோவை மாவட்ட செய்திகள்

கோவை: ஒண்டிப்புதூர் அருகே மின் இணைப்பு வழங்க கையூட்டு கேட்டு உதவி மின் பொறியாளரின் இடைத்தரகர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

intermediary-asked-for-bribe-for-electrical-connection

author img

By

Published : Feb 4, 2021, 8:13 AM IST

கோவை ஒண்டிப்புதூா் அருகே தொழிலாளி ஒருவா் தனது கட்டடத்துக்கு வா்த்தக மின் இணைப்புப் பெறுவதற்காக மின் உரிம ஒப்பந்ததாரரை அணுகி ஆவணங்களை இணையம் மூலமாகப் பதிவுசெய்து, ரூ.4,500 கட்டணம் செலுத்தியுள்ளார்.

பின்னா், அப்பகுதியைச் சோ்ந்த உதவி மின் பொறியாளா் கட்டடத்தை நேரில் பாா்வையிட்டுச் சென்ற பிறகும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதையடுத்து, மின் இணைப்பு வழங்க உதவி மின் பொறியாளருக்கு இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டும் என ஒப்பந்தததாரா் கூறியுள்ளாா். அதன்படி, தொழிலாளி பணத்தைக் கொடுத்துள்ளாா். அதன் பிறகும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, உதவி மின் பொறியாளரைச் சந்தித்து மின் இணைப்பு வழங்குமாறு தொழிலாளி வலியுறுத்தியுள்ளாா்.

அப்போது, இடைத்தரகா் ஒருவரைச் சந்தித்துப் பேசுமாறு உதவி மின் பொறியாளா் கூறியதையடுத்து, இடைத்தரகருடன் பேசியபோது, உதவி மின் பொறியாளருக்கு ரூ.20 ஆயிரமும், லைன் மேன், போா்மேன்களுக்குத் தனியாக பணம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதில் கையூட்டு கேட்டு இடைத்தரகர் பேரம் பேசியதை சம்பந்தப்பட்ட தொழிலாளி தனது செல்போனில் பதிவுசெய்து வாட்ஸ்அப் மூலம் அவரின் நண்பா்கள், சமூக ஆா்வலா்களுக்கு அனுப்பியுள்ளாா்.

தற்போது இந்த ஆடியோ பதிவு கோவையில் வேகமாகப் பரவிவருகிறது. இது மின் வாரிய அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மின் இணைப்பிற்கு கையூட்டு கேட்ட இடைத்தரகர்

இதில் சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலா்கள் மீது விரைவில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின் வாரிய அலுவலர் ஒருவா் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 70 பெண்களை மயக்கிய மன்மதன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.