இந்திய விமானப்படையில் இளநிலை பயிற்றுநர், முதுநிலை பயிற்றுநர்களுக்கான தேர்வு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்தேர்வில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாரில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இன்று உடல் தகுதி தேர்வும், நாளை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல், நாளை மறுதினம் சென்னையில் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்வை ஒட்டி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளதாகவும், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீசார் சோதனைக்கு பிறகு தேர்வாளர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த மாதம் 20, 21, 22 ஆகிய தேதிகளில் கேரளாவில் தேர்வு நடைபெறும் எனவும் விமானப்படை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: மதுபான பாட்டிலில் பசை போன்ற பொருள் - அதிர்ந்த குடிமகன்!